சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர்
வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டம் மூலம்
ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது. ஜல்லிக்கட்டு ஒப்புதலை அடுத்து
மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
நாளை நடைபெறுகிறது. அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க மதுரை புறப்பட்டு
சென்றுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,
பெண்கள் தன்னெழுச்சி போரட்டாமாக எழுந்தது.

நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைக்கிறார்
மதுரை: நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. மேலும் பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட உள்ளது. இதற்காக அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதனை தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைக்க உள்ளார்.Source: http://www.dinakaran.com