ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் 5 கிமீ தூரத்துக்கு ஊர்வலம் நடத்திய ஐடி ஊழியர்கள்!!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவையில் உள்ள டைடல் பார்க்கில் பணிபுரியம் பல்வேறு நிறுவன ஊழியர்கள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கோவை ஹோப் காலேஷ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் டைடல் பார்க்கில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source: TAMIL ONE INDIA NEWS
Share on Google Plus

About Sabareeshwaran K