ஜியோவின் அடுத்த அதிரடி... மலிவு விலையில் டிடிஎச் சேவை...!

ரிலையன்ஸ் டெலிகாம் அதிரடியான இலவச இன்டர்நெட் மற்றும் இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்கிவரும் நேரத்தில், தற்போது அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளது.

மொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ இப்போது டிஜிட்டல் டிவி சந்தை இடத்தை நோக்கி தனது அடுத்த இலக்கை செலுத்தவுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவான டிடிஎச் சேவையை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவையில்க ளமிரங்கவுள்ளத்தால், பார்தி ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சிறப்பு ஆஃபர்களை தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது எனினும், ஜியோ அளவிற்கு இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவையை வழங்க முடியுமா.? என்பது கேள்விக்குறி தான். 

ஜியோவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல டிடிஎச் நிறுவனங்கள் கடும் போட்டியினை சந்திக்கவுள்ளது எனலாம். மொபைல் நெட்வொர்க்கில் ஒர் புரட்சியை உண்டாக்கிய ஜியோ இப்போது பிராட்பேண்ட் உலகை தன்வசம் இழுக்க திட்டமிட்டுள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, டாடா ஸ்கை, வீடியோகான் டி2எச் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ டிடிஎச் சேவை களமிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச்- இன் மாதாந்திர கட்டணம் ரூ.185/-யை விடகுறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Source: Puthiyathalaimurai - Jio
Share on Google Plus

About Sabareeshwaran K