மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.கபரபரப்பான தேர்தல் சூழலில் விஜயகாந்தின் தே.மு.தி. கட்சி மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது. மேலும் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 124 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தே.மு.தி. அலுவலகத்துக்கு வந்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்துக்கு வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய நால்வரும் வந்தனர்.
Share on Google Plus

About Sabareeshwaran K