நீர்த்துளி...உயிர்த்துளி--புதிய தலைமுறை தொலைக்காட்சி

                                                

News Obtained from Puthiyathalaimurai website

                  உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா வரும் 2025 ம் ஆண்டு முதலிடத்திற்கு முன்னேறும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. 
                               
                             இதேபோல உலக அளவிலானமக்கள் தொகையும் 720 கோடிக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவையும் அதிகரித்தே வருகிறது. ஆனால், அதிகரிக்கும் குப்பை, மறுசுழற்சி செய்யப்படாத கழிவு நீர், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலைக்கழிவுகள் என தண்ணீரின் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் பல நிகழ்வுகளும் அதிகரித்தே வருகின்றன. 

                       இத்தகைய சூழலில் சுகாதாரமான தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும், தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்தும்பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது புதியதலைமுறை தொலைக்காட்சி

                                 நீர்த்துளி..உயிர்த்துளி என்ற தலைப்பில் தொடர் பரப்புரைகள், தொலைக்காட்சி கலந்துரையாடல்கள், விவாதங்கள், விழிப்புணர்வு பேரணிகள் என பல்வேறு நிகழ்வுகளை முன்னின்று நடத்தி வருகிறது புதியதலைமுறை. அந்தவகையில், குறும்படப் போட்டிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. புதிய தலைமுறையின் மாசற்ற பூமி படைத்து, சுகாதாரமான தண்ணீரை நமது அடுத்த சந்ததிக்கு விட்டுச்செல்லும் புனிதப்பணியில் நீங்களும் ஈடுபடவேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம்.

                           

                                              

குறும்படத்தின் பொருள் / கரு
நீர்த்துளி...உயிர்த்துளி

குறும்படத்தின் காலம் (Duration) :
2 நிமிடங்கள் (Opening Title & End Title சேர்த்து) 

அனுப்ப வேண்டிய ஃபார்மேட் :
.mp4, .mov file (HD/ SD format- ல்)

டிவிடி (DVD)
வெளிநாடு வாழ் குறும்படப் படைப்பாளிகள்
WeTransfer (https://www.wetransfer.com/) பயன்படுத்தலாம். அதற்கான மின்னஞ்சல்: online@puthiyathalaimurai.tv

படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.11.2014

மொழி : உங்கள் குறும்படம் தமிழ் பேசவேண்டும் அல்லது எந்த மொழியும் பேசாமல்கூட இருக்கலாம்.

 
 

நீர்த்துளி...உயிர்த்துளி
புதிய தலைமுறை தொலைக்காட்சி
25 A - NP தொழிற்பேட்டை
ஈக்காட்டுத்தாங்கல்
சென்னை - 600 032.
தொலைபேசி : 044 45969500

பங்கேற்பவர்களின் வயது, கல்வித்தகுதிக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். குறும்படத்தைப் போட்டிக்கு அனுப்பும் படைப்பாளிகள் டிவிடியுடன், குறும்படத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் தமது பரப்புரை நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்த கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

                                
அனுப்புனர்
பெறுனர்
தலைமை செய்தி ஆசிரியர்
புதியதலைமுறை செய்திப்பிரிவு
புதியதலைமுறை தொலைக்காட்சி
சென்னை.

ஐயா,
புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திவரும் நீர்த்துளி உயிர்த்துளி குறும்படப்போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன்.

இப்போட்டிக்காக தயாரித்த 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தின் டிவிடியை இத்துடன் இணைத்துள்ளேன். 

குறும்படம் தேர்வு செய்யப்படுவதில் புதியதலைமுறையின் செய்திக்குழுவின் முடிவே இறுதியானது என்று நான் அறிவேன். மேலும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் எமது இந்த குறும்படத்தை தமது நீர்த்துளி உயிர்த்துளிபரப்புரை நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு முழு சம்மதம் என்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் அன்புள்ள..



" Don't be selfish by knowing this news "
 Help your friends to know about this and make them participate by sharing this post from "puthiyathalaimurai" 

Share on Google Plus

About Sabareeshwaran K